நீங்கள் தாவீதா சவுலா

யாரு இந்த தாவீதும் சவுலும்

இருவரும் இஸ்ராயேல் மக்களின் அரசர்கள்.

சவுல் இஸ்ராயேல் மக்களின் முதல் அரசன் தாவீது அதற்கு பின் அரசனானவர்.

இருவரும் ஆண்டவரினால் அபிசேகம் பண்ணப்பட்டவர்கள்.இருவரோடும் ஆண்டவரின் ஆவி இருந்தது.ஆனால் ஒருவரோடு மட்டுமே ஆண்டவரின் ஆவி கடைசி வரைக்கும் இருந்தது. மற்றவரிடமிருந்து இடையிலேயேஆண்டவருடைய ஆவிஎடுக்கப்பட்டது.

ஆண்டவரினால் இஸ்ராயேல் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட இவர்கள் யார்?

இருவரும் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

தாவீதுஆடு மேய்ப்பவன் 1 சாமுவேல் 16.7 கூறுகின்றது மனிதர் முகத்தைப்பார்க்கின்றனர் கடவுளோஅகத்தைப்பார்க்கின்றார். 1 சாமுவேல் 9.21 சவுல் கூறுகின்றார் பென்யமின் குலத்து குடும்பங்களில் என்னுடையதுமிகச்சிறியதன்றோ என்று.

நாம் நம்மை இந்த சம்பவத்தோடு இணைத்துப்பார்ப்போம்.எமக்கும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கலாம் ஆண்டவருக்காக சேவை செய்வதற்கென்று.அப்போது நாமும் கேட்டிருப்போம் நானா இதை செய்வது என்று.ஆனால் எத்தனையோ மக்கள் இருக்கும்போது உங்களுக்கு அழைப்பு வருகின்றது என்றால் ஆண்டவர் உங்களை தெரிந்தெடுத்துள்ளார்.

பரிசுத்த ஆவியை பெற்றபின்பு இவர்களுடைய வாழ்க்கைஎப்படி இருந்தது?

சவுல் செபித்ததாக வேதாகமத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை 1 சாமுவேல் 14.12 வாசிக்கின்றோம் ஆண்டவரின் தயவைநான் இன்னும் நாடவில்லை என்று சவுல் கூறுகின்றார்.

தாவீது கடவுளுக்கு பயந்து வாழ்ந்தார் துன்பத்திலும் செபித்தார். சங்கீதங்கள் பல எழுதியுள்ளார்.தாவீதின் புகழ் பாடல்கள் வெற்றிப்பாடல்கள் என்று பலவற்றைக்காணலாம்.

திருமுழுக்கு மூலமாகவும் உறுதிபூசுதல் வழியாகவும் பரிசுத்தஆவியை பெற்ற நாம் எப்படியான வாழ்வு வாழ்கின்றோம். சிந்திப்போம்.

பரிசுத்தஆவியானவர் எப்போதெல்லாம் இவர்களுடன் செயல்பட்டார்?

1 சாமுவேல் 10.9 கடவுளின் ஆவிஅவரை வலிமையோடுஆட்கொள்ளஅவர் பரவசமடைந்து பேசினார் அடுத்ததாக 1சாமுவேல் 11.6 கடவுளின் ஆவி அவரை வலிமையோடு ஆட்கொள்ள 1 சோடிமாடுகளை துண்டுகளாக வெட்டினார் என்று வாசிக்கின்றோம்.இது சவுலிற்கு ஏற்பட்ட அனுபவம்.

1 சாமுவேல்16.13 அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் இருந்தது.

கடவுளும் கடவுளின் ஆவியும் எப்போதும் தாவீதோடிருந்தது.

சவுலோடிருந்த கடவுளின் ஆவி அவரைவிட்டு வெளியேறியது.ஏன்??

சவுல் செய்த முதல் தவறு

குருக்கள் செய்யவேண்டியதை தானே செய்தது.

சுருக்கமாக பர்ப்போமாயின் சாமுவேலின் வருகை தாமதித்ததால்

சாமுவேல் ஆண்டவருக்கு செய்ய வேண்டிய எரி பலிகளையும் நன்றி பலிகளையும் தானாகவே செய்தது.

அமலேக்கியருக்கு எதிரானபோரின் போது ; இரண்டாவது தடவை ஆண்டவருடைய கட்டளையை மீறுகின்றார்.

இவ்வாறாக தவறின் மேல் தவறு செய்து கொண்டே போகின்றார்.மனம் மாறவில்லை தன்னுடைய தவறுகளை உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

தாவீதும் தவறுகள் செய்தார்.முக்கியமான தவறுகளில் ஒன்று உரியாவின் மனைவியை அடைந்தது.உரியாவின் மனைவியை அடைந்தது மட்டுமல்லாமல் அவருடைய தவறை மறைப்பதற்காக மேலும் மேலும் தவறுகளை செய்தார் அதிலொன்று உரியாவை தன்னுடைய போர் வீரர்களை வைத்து கொலை செய்தது.ஆனால் இறைவாக்கினர் நாத்தான் மூலமாக ஆண்டவர் தாவீதின் தவறுகளை எடுத்துரைக்கின்றார்.

தாவீதும் தன் தவறுகளை நினைத்து மனம் மனம் வருந்துகின்றார் மனம் மாறுகின்றார் துன்பத்திலும் ஆண்டவரை விட்டு விலகாமல் எப்போதும் ஆண்டவரை நம்பியே வாழ்கின்றார்.தாவீதும் தொடர்ந்து ஆசிர்வதிக்கப்படுகின்றார்.தாவீதின் சந்ததி பெருகுகின்றது அதன் வழி சாலமோன் மன்னன் அதனை தொடர்ந்து தாவீதின் மகன் என்று அழைக்கப்படும் யேசு.

புpரியமானவர்களே நீங்களும் சற்று சிந்தித்து பாருங்கள் திருமுழுக்கு மூலமாக உறுதி பூசுதல் மூலமாக பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்ட நீங்கள் எந்த மன்னனுடைய வாழ்க்கை வாழ்கின்றீர்கள்.

 

Leave a Reply

Top